வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை நான் விசுவாசிக்கின்றேன். எம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என விசுவாசிக்கின்றேன், அவர் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரினால்; கன்னியாகிய மரியாளிடம் உற்பத்தியானவர், பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தின் கீழ் பாடுபட்டவர், சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்; மரணம் வரை தாழ்த்தப்பட்டார். மறுபடியும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்; பரலோகத்திற்குள் ஏறெடுக்கப்பட்டார், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்றார், அத்துடன் அவர் மரித்தவர்களையும், உயிரோடிருக்கிறவர்களையும் நியாயந்தீர்ப்பதற்காக வருவார். நான் பரிசுத்த ஆவியானவரையும், பரிசுத்த சபையையும் விசுவாசிக்கின்றேன், பரிசுத்தவான்களுடனான ஐக்கியத்தையும், பாவத்திற்கான மன்னிப்பையும், சரீரத்துடன் உயிர்த்தெழுதலையும், நித்திய ஜீவனையும் விசுவாசிக்கின்றேன். ஆமென்.