பைபிளும் அறிவியலும்
ஒப்புக் கொள்கின்றன

http://www.creationism.org/tamil/BibleSci_ta.htm

விஞ்ஞானிகள் ஒவ்வொரு காலத்திலும் விஞ்ஞான விடயங்களில் அடிக்கடி தவறு விட்டிருக்கிறார்கள். ஆயினும் பரிசுத்த வேதாகமம் ஒருபோதுமே தவறுவிடவில்லை - இது அறிவியல் பூர்வமான விடயங்களை துல்லியமாக நிரூபித்துள்ளது. அடிப்படையில் பைபிள் ஒரு அறிவியல் ரீதியான புத்தகம் அல்ல என்றாலும், கடந்து சொல்லும் பல அறிவியல் விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன - அவை பிற்பட்ட காலங்களில் மிகவும் சரியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது!


விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் நம்பியது
ஆனால் இப்போது அறிவியல் காண்பிப்பது
பைபிள் எப்போதும் சொல்வது
முழு பிரபஞ்சத்திலும் ஆயிரத்திருநூறு நட்சத்திரங்கள் மட்டுமே இருக்கும் டிரில்லியன் டிரில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன; அவற்றை மனிதனால் எண்ண முடியாது! எரேமியா 33: 22 "வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் ..."
பூமி தட்டையானது பூமி உருண்டையாக உள்ளது. ஏசாயா 40: 22 "அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; ..."
ஒளி பயணிக்காது, அது அங்கே தான் இருக்கிறது. ஒளி பயணிக்கும் - மற்றும் பௌதீக இயல்புககளைக் கொண்டுள்ளது; "ஒளி அலைகள்" அல்லது ஃபோட்டான்கள். யோபு 38: 19 "வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? ..."
நிலையான தன்மைக் கோட்பாடு, நட்சத்திரங்கள் சுயாதீனமாக வெளியில் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்துவமானதும், இரண்டு நட்சத்திரங்களுக்கிடையில் ஈர்ப்பு விசை இணைப்பும் உள்ளது. யோபு 38:31 "அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?"
ஒரு நபரை குணப்படுத்த வேண்டுமாயின், அவரில் காணப்படுகின்ற அசுத்தமான குருதி வெளியேற்றப்படல் வேண்டும். குருதி உயிருக்கு இன்றியமையாதது, சில சமயங்களில் குருதியை சேர்ப்பதற்காக ஒரு குருதி மாற்றீடு செய்ய வேண்டி ஏற்படும். லேவியராகமம் 17: 11 "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது;..."
வளிக்கு திணிவு இல்லை, அது அங்கே தான் இருக்கிறது. ஒட்சிசன், நைத்திரசன், காபனீரொட்சைட்டு என்பன தத்தமக்குரிய அணுத் திணிவுகளைக் கொண்டுள்ளன. யோபு 28: 25 "அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து,..."
பூமி முழுவதும் காற்று நேராக வீசுகின்றது. காற்று சுழிகள் பெரிய வட்ட வடிவங்களில் நகரும். பிரசங்கி 1: 6 "...காற்று தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.."
பூமி ஒருவரின் முதுகில் சுமக்கப்படுகிறது. பூமி விண்வெளியில் மிதக்கிறது. யோபு 26: 7 "...பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்.."
மக்கள் இயல்பாகவே வியாதிப்படுகிறார்கள்; கை கழுவ வேண்டிய அவசியமல்ல. தொடுகை மூலம் பல நோய்கள் பரவுகின்றன; ஓடும் நீரில் கைகளை கழுவ வேண்டும். லேவியராகமம் 15: 13 "...தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் b>தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்...."
நட்சத்திரங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று ஒத்தவை. ஒவ்வொரு நட்சத்திரமும் உண்மையில் வித்தியசமும் தனித்துவமுமானது. 1 கொரிந்தியர் 15: 41 ".மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது...."
எவ்வித காரணமுமின்றி ஒன்றுமில்லாததிலிருந்து இன்னொன்று தோன்றுதல் - 'அந்த பெருவெடிப்புக் கொள்கை" - மாயா ஜாலமான, ஒரு பிரபஞ்சத்தைப் பாருங்கள்! ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு; அது உண்மையான அறிவியல். நடவடிக்கையும் விளைவும்; வெளியீடு ஒன்றை பெற உள்ளீடு ஒன்று அவசியம். ஆதியாகமம் 1: 1 "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.."

கிரேக்க விஞ்ஞானி கிளாடியஸ் தொலமி (கி.பி. 150) ஒரு புத்திசாலி, அவர் பிரபஞ்சத்தின் ஏனைய பகுதிகள் பூமியைச் சுற்றி வருகின்றது என்று பிழையாக கற்பித்தார். தவறு. ஆனால் பாருங்கள், விஞ்ஞானிகள் அதனை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நம்பினர். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பூமியைச் சுற்றி வருவதாகவே கற்பித்தனர்; அத்துடன் அவர்கள் தங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்த ஐரோப்பிய சபை - மாநிலத் தலைவர்களும் ஏனைய அறிவாற்றலான கல்விமான்களும் இந்த கருத்தை நம்ப வைத்தனர். (பைபிள் கற்பிக்காத விடயங்களைக் கற்பிக்கும் சபைகளையும் தலைவர்களையும் போன்றது) விஞ்ஞானிகளின் இந்த நம்பிக்கையானது முற்றிலும் தவறானது.

மதம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்பதற்கு கலிலியோ ஒரு உதாரணம் அல்ல, ஆயினும் அதற்கு மாறாக "கலிலியோ எபிசோட்" என்பது விஞ்ஞானிகளின் இவ்வாறான ஒருமித்த கருத்துகள் தவறானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் அவர்கள் மற்றவர்களையும் நம்ப வைத்து கலிலியோ மற்றும் கொப்பனிகசுக்கு எதிராக, கிட்டத்தட்ட கி. பி. 1600களில் திருப்பிவிட்டார்கள்.

மதம் எம்மை உண்மைக்கு அருகில் கொண்டு செல்லுமாயின் அது நல்லதாக அமையும்.

விஞ்ஞானமும் எம்மை உண்மைக்கு அருகில் கொண்டு செல்லுமாயின் அதுவும் நல்லதாக அமையும்.

விஞ்ஞானிகளும் மனிதர்களாக இருந்து, கலிலியோ நாட்களில் இருந்தவர்களை போல, சில சந்தர்ப்பங்களில் தவறு விடுகிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், விஞ்ஞானிகள் தான் தவறான முடிவெடுத்தார்கள், அத்துடன் அவர்கள், பிரபஞ்சத்தின் ஏனைய பகுதிகள் பூமியைச் சுற்றி வருகின்றது என்பதை மற்றவர்களையும் நம்ப வைத்தார்கள்.

சில விஞ்ஞானிகள் ஜோதிடத்தை வானவியலுடன் இணைக்கப் பழகினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் ரசவாதத்தை வேதியியலுடன் இணைத்து பலரை முட்டாளாக்கினர். விஞ்ஞானிகள் காலப்போக்கில் விஞ்ஞானத்தைப் பற்றி தவறாகப் பேசிய போதும் பைபிள் நிலையானதாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. பரிணாம வளர்ச்சி உண்மையாக இருக்க முடியாது என்று உண்மையான விஞ்ஞானம் சுட்டிக் காட்டிய போதிலும், இன்று பரிணாம வாதிகள் தங்கள் நம்பிக்கைகளை விஞ்ஞானிகளுடன் இணைக்கிறார்கள். ஆனால் நம்முடைய தோற்றம் பற்றிய உண்மையை பைபிள் கூறியுள்ளது. ஆதியாகமம் 1: 1 " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்..."

பரிணாம ரீதியான விஞ்ஞானிகள் உண்மையான அறிவியலைக் குறித்து மீண்டும் தவறு செய்கிறார்கள்; பைபிள் இன்னும் நேர்த்தியாகவும் உண்மையாகவும் காணப்படுகிறது.


REFERENCES - For More Information

"Hidden Treasures in the Biblical Text" by Chuck Missler, c. 2000.  Published by Koinonia House, 120 pages.  ISBN 1-57821-127-1

"Scientific Facts in the Bible" by Ray Comfort, c.2001.  Published by Bridge-Logos Publishers, 95 pages.  ISBN 0-88270-879-1

"The Vanishing Proofs of Evolution" by Thomas F. Heinze.  Published by Chick Publications, 94 pages.  ISBN 0-758905-70-X
 

"பைபிளும் அறிவியலும் ஒப்புக் கொள்கின்றன"
<http://www.creationism.org/tamil/BibleSci_ta.htm>

பிரதானம:  தமிழ்
www.creationism.org