INVESTIGATING GENESIS SERIES
©2002  by Gerard Wakefield    http://www.creationism.org/wakefield/
http://www.creationism.org/tamil/piltdownbirdshort_ta.htm


" 'Piltdown Chicken' — Another Evolutionary Hoax"
“பில்ற்டெளன் சிக்கின்' - மற்றொரு பரிணாம மோசடி”

டைநோசரில் இருந்து பறவைகள் பரிணாமம் அடைந்தது என்பதை “நிரூபிக்கும்” ஒரு சிருஷ்டிப்பின் நிழற்படத்தை 1999ல், நசனல் ஜியோக்கிராபிக் பிரசுரித்திருந்தது. ஆச்சியோறாப்ரோர் (Archaeoraptor) என அழைக்கப்பட்டது, இது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் “சிக்கலான சங்கிலியின் ஒரு உண்மையான இழந்து போன இணைப்பாக டைநோசரை பறவையுடன் தொடுப்பதாக” புகழ்ந்துரைக்கப்பட்டது (Sloan 100). அந்த நிழற்படத்தில் ஒரு சிருஷ்டிப்பு “ஒரு பழமையான பறவையின் கரங்களுடனும் ஒரு டைநோசரின் வாலுடனும் காட்டப்பட்டது.” (Ibid.), இவ்வாறான கூற்றும் அதனை அனுசரித்து இருந்தது, “இது உண்மையில் பறக்கக் கூடிய பறவைக்கும் நிலத்தில் வாழும் டைநோசருக்கும் இடையேயான இழந்து போன இணைப்பாகும்” (Ibid). “அத்துடன் இந்தச் சுவடியானது பெரும்பாலும் திறமான அத்தாட்சியாக ஆச்சியோறாப்ரெறிக்ஸ் (Archaeopteryx) பறவைகள் பரிணாமம் அடைந்ததிற்கு இருக்கின்றது, உண்மையில், புலால் உண்ணும் டைநோசர்ஸின் குறிப்பிட்ட இனத்தில் (ட்ரோமயியோசர்ஸ் [dromaeosaurs]) இருந்து பரிணாமம் அடைந்துள்ளது" (Ibid. 101).

Piltdown Man Hoax, 1912
Piltdown Man in 1912
Archaeopteryx Fossil
Related Fossil: Archaeopteryx

மார்ச் 2000 இதழின் பதிப்பாசிரியருக்கான கடிதத்தில், எப்படியாயினும், பலியோரோலோஜிஸ்ற் க்ஸ்யு க்ஸிங் (விஞ்ஞானத்தின் சீன அக்கடமி) (Paleontologist Xu Xing (Chinese Academy of Sciences) எழுதியது, ஆச்சியோறாப்ரோர் ஒரு ட்ரோமயியோசர்ஸின் வாலுடன் ஒரு பறவையின் உடல் இணைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.” விசாரணை தகவல் சேகரிப்பவர் லேவிஸ் சீமோன்ஸ் மோசடிக்குள் உண்மையை நாடித் தகவல் சேகரித்தபோது, அவர் திரை நீக்கம் செய்தது

தவறாக வழிகாட்டப்பட்ட இரகசியத்தின் ஒரு கட்டுக்கதையும் தவறுதலாக இடம் மாறிய நம்பிக்கையும், சீறியெழும் தற்பெருமைகளின் மேதலும், ஆக்கிரமிப்புகளும், விருப்பத்துடன் சிந்தித்து, கபடற்ற ஊகங்களாகவும், மனிதத் தவறும், வீண் பிடிவாதமும், திறமையாகக் கையாளுதலும், புறங்கூறுதலும், பொய்யும், கறைப்படுதலும், அத்துடன் எல்லாவற்றிலும் அதிகமாக, படுகேவலமான தொடர்பாடலுமாக இருக்கிறது. (சீமோன்ஸ் 128).


சீனநாட்டு விவசாயி ஒருவர் இரண்டு வெவ்வேறு சுவடிகளை ஒன்றாக ஒட்டி “அதனை” ஒரு சுவடி விநியோகஸ்தருக்கு விற்பனை செய்துள்ளார், “அவர் 'பலபகுதிகளை ஒன்று சேர்த்து' விற்பவர் என்பதை தெரிந்துள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளர்” (Ibid. 129). அது தனது வழியில் ஸ்ரீபன் ஸார்கஸ் என்பவரைக் கண்டு கொண்டது, அவர் விஞ்ஞான ரீதியான தகமைகள் அற்ற டைநோசர் பிரியராவார், இவர் பலியோரோலோஜிஸ்ற் பிலிப் குரே என்பவருடன் தொடர்பு கொண்டார். சீமோன்ஸ் எழுதுகையில், “குரே என்பர் உலகைச் சுற்றிலுமுள்ள மற்றைய அர்ப்பணிப்புகளினால் மிகவும் கவனம் திருப்பப்்பட்டவராக இருந்தமையால், ஆச்சியோறாப்ரோர் செயல்முறைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது” (Ibid. 130).

இந்தச் சுவடி குறித்து ஒதுக்கி வைக்க வேண்டி குரேக்கு இருந்தது, ஆயினும் அதனை 1999ல் கட்டுரை எழுதிய கிறிஸ்ரோபர் ஸ்லோன் என்பவருக்கு அறிவிக்கத் தவறிவிட்டார். சீமோன்ஸ் இதனை குரேயின் பங்கில் “ஒரு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பொறுப்பின் கடமையில் தவறுதல்” என அழைக்கிறார். (Ibid). இந்த சுவடியை பரிசோதித்த ரெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தீமோத்தேயு ராவ், கூறுகையில், “இங்கே (இது) போலியானதாக இருப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது” (Ibid). குரே சகவேலையாளான, புதைபடிவம் பற்றிய நுட்ப வல்லுனரான கெவின் அவுலேன்பாக் என்பரை விசாரணைக்காக அனுப்பினார்; “இந்தப் புதைபடிவமானது பலபகுதிகளை ஒன்று சேர்த்த மாதிரி” என அவுலேன்பாக் முடிவாக்கக் கூறினார் (Ibid 131).

இதற்கிடையில், ஸார்கஸ் என்பவரும் குரே என்பவரும் இயற்கை மற்றும் விஞ்ஞானம் எனும் நாளேடுகளுக்கு ஒரு காகிதத்தை ஒப்புவித்தார்கள். அந்த அசலான திட்டக் குறிப்பை சீமோன்ஸ் விபரிக்கையில்:
 

அந்தக் காகிதத்தின் ஐந்தாவது பக்கத்தில் ரோமியோசர்-போல வால் ஒரு பறவை போன்ற சிருஷ்டிப்பின் மீது இருப்பது பூமியில் உள்ள டைநோசரில் இருந்து பறவைகளின் பரிணாமத்தில் ஒரு முன்னுள்ள அறியப்படாத மூலக் கூறுகள் இருந்துள்ளது என்பதை யோசனையாகக் கூறப்பட்டது. இதனைச் சுருக்கமாக, ஸார்கஸ் நசனல் ஜியோக்கிராபிக் க்கு “இழந்து போன இணைப்பு” இருந்தது என கூற விரும்பினார்.


இரண்டு நாளேடுகளும் அந்தக் கட்டுரையை நிராகரித்தன (Ibid.131-132). அல்லாமலும், நசனல் ஜியோக்கிராபிக் முன்னோக்கிச் சென்று தன்னுடைய சொந்த மொழிபெயரப்பை வழங்கியது. சீமோன்ஸ் இதன் விளைவாக வரும் தொடர்பு சாதனங்களின் கிளர்ச்சியை ஒரு “பத்திரியையாளருக்கான நாயின் மற்றும் கோவேறு கழுதையின் காட்சி” என அழைக்கிறார் (Ibid.).

குரே கூறியது, இதுவே "எனது வாழ்க்கையின் பெரிதான தவறு ஆகும்." ... ...
….. அவர்கள் பார்க்க வேண்டும் என விரும்பியதைக் கண்டார்கள்.

அதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் க்யு ஸ்லேன் க்கு அறிவித்தது, “நான் 100% நிச்சயமாக….. ஆச்சியோறாப்ரோர் ஒரு போலியாகச் செய்யப்பட்ட ஆக்கக்கூறு என அறிவேன்” என்றார் (Ibid.). வஞ்சகமான மோசடி வெளிப்பட்ட பின்னர், ஸார்கஸ் “ஒரு விவேகமற்ற முட்டாள்-எலும்பு தவறு” ஏற்படுத்தியுள்ளேன்” என ஒத்துக் கொண்டார். குரே கூறியது, “எனது வாழ்க்கையிலே நான் செய்ய மிகப் பெரிய தவறு.” ஸ்லோன் குறிப்பிட்டது, “நான் ஒரு அரக்கனை இழுத்துக் கொண்டு இருந்துள்ளேன்” (Ibid.). நசனல் ஜியோக்கிராபிக்கின் பிரதான பதிப்பாசிரியர் வில்லியம் அலன் கேட்டது, “எவ்வாறு நாம் இந்த சீர்குலைவிற்குள் சென்றோம்?” (Ibid. 128). சீமோன்ஸ் ஒரு பதிலை வழங்குகிறார்: “இதனைக் கண்ட…. சில முதன்மையான பலியோரோலோஜிஸ்ற் அதிக காலமாக பரிணாமத்தின் இரகசியததிற்கு மூலாதாரமாகத் தேடிய சிறிய எலும்புக் கூடாக இருந்தது” (Ibid.). தாங்கள் பார்க்க வேண்டும் என்றிருந்ததை அவர்கள் கண்டார்கள்.

திறனாய்வுக் குறைகாணல் கடூரமான கண்டனமாக இருந்துள்ளது. ஒரு கட்டுரையில் இருபது மகத்தான விஞ்ஞான கண்மூடித்தனமான தவறிழைப்பவர்கள் கடந்த இருபது வருடங்களாக, டிஸ்கவரி சஞ்சிகையில் பட்டியலிட்டு “பில்ற்டெளன் சிக்கின்” என மோசடிக்கு அவர்களின் வார்தையைக் கொடுத்துள்ளார்கள். இந்தத் தலைப்பு பில்ற்டெளன் மனிதன் என்பதில் இருந்து வந்துள்ளது, செயற்றையாக பலபகுதிகளை ஒன்றிணைத்த ஒரு மனித மண்டையோட்டுடன் ஒரு குரங்கின் தாடை எழும்பை இணைந்து 1912ல் “கண்டுபிடிக்கப்பட்டது” ஆகும் (Newman 80). முன்னிருந்த பலியோரோலோஜிஸ்ற் மனிதப் பரிணாமத்தை நிரூபிப்பதற்கான ஆதாரத்திற்காக பிடிவாதமாக இருந்தமையால் பில்ற்டெளன் மனிதனை விருப்பத்துடன் அரவணைத்தனர், டைநோசரில் இருந்து பறவைகள் பரிணாமம் அடைந்தது என்பதை நிரூபிப்பதற்கு வெறிபிடித்திருக்கும் தற்காலத்திய விஞ்ஞானிகள் ஆச்சியோறாப்ரோர் ஐ விருப்பத்துடன் அரவணைக்கின்றனர்.
 
    References:

Newman, Judith. (2000). "Twenty of the Greatest Blunders in Science in the Last Twenty Years." Discover 21, no. 10.

Simons, Lewis (2000). "Archaeoraptor Fossil Trail." National Geographic 198, no. 4.

Sloan, Christopher (1999). "Feathers for T. Rex?" National Geographic 196, no. 5.
 

"பில்ற்டெளன் சிக்கின்' - மற்றொரு பரிணாம மோசடி"
<http://www.creationism.org/tamil/piltdownbirdshort_ta.htm>

பிரதானம:  தமிழ்
www.creationism.org